'காசேதான் கடவுளடா' ரீமேக்கில் வடிவேலு!

1972 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற் காமெடி படம் 'காசேதான் கடவுளடா'. இதில் முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

இப்படத்தில் வரும் 'காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா' என்ற பாடல் இப்போது வரை பிரபலமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்தில், சிறிய நடிகர்கள் நடித்து பெரும் வசூலை வாரி குவித்த படம் இது.

இப்படத்தினை மீண்டும் தமிழில் உருவாக்க இருக்கிறார்கள். 'ஒன்பதுல குரு' படத்தினை இயக்கிய PRO செல்வக்குமார் இந்த ரீமேக்கை இயக்க இருக்கிறார். கிரேஸி மோகன் வசனம் எழுத இருக்கிறார்.

ரீமேக் குறித்து செல்வக்குமார் "தேங்காய் சீனிவாசன் வேடத்திற்கு எனக்கு வடிவேலுவை விட்டால் வேறு யாரையும் நினைக்க முடியவில்லை. அவரிடம் பேசி இருக்கிறேன். அவரும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

முத்துராமன், ஸ்ரீகாந்த் இருவரது வேடங்களுக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவரிடம் பேசி இருக்கிறேன். மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கப்படும். விரைவில் அதிகாரப்பூர்வமாக யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கிறேன் " என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!