துருவ நட்சத்திரத்தில் 'மரியான்' மார்க்ஸா?

'மரியான்' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் டீஸரைப் பார்த்தவர்கள் படத்தின் ஒளிப்பதிவாளரை வெகுவாகப் பாராட்டினார்கள். தற்போது அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து இருக்கின்றன.

'மரியான்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவர் மார்க் கொனிக்ஸ் என்கிற பிரெஞ்சுக்காரர். 'மரியான்' படத்தின் கதைக்கு இவர் தான் சரியாக இருப்பார் என்று தேர்வு செய்தோம் என்றார் இயக்குனர் பரத்பாலா.

இதுவரை யூடியூப்பில்  வெளியாகி இருக்கும் 'மரியான்' பாடல்கள் மற்றும் டிரெய்லரைப் பார்த்த 'துருவ நட்சத்திரம்' படக்குழு, அப்படத்தின் ஒளிப்பதிவாளராக மார்க்கை ஒப்பந்தம் செய்யலாமா என்ற ஆலோசனையில் இறங்கி இருக்கிறது.

'துருவ நட்சத்திரம்' படத்திற்கு இதுவரை எந்த   ஒளிப்பதிவாளரையும்  ஒப்பந்தம் செய்யவில்லை. படத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவாளரைத்  தேடி வந்தார் இயக்குனர் கெளதம் மேனன்.

இன்னும் அதிகாரப்பூர்வமாக மார்க் கொனிக்ஸ் என்று அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிப்புகள் வரலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!