ரஹ்மான் ' பிரியாணி ' பரிமாறுவாரா? | பிரியாணி, யுவன், வெங்கட்பிரபு, கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (18/05/2013)

கடைசி தொடர்பு:13:50 (18/05/2013)

ரஹ்மான் ' பிரியாணி ' பரிமாறுவாரா?

மே 25ம் தேதி கார்த்தி பிறந்தநாளையொட்டி 'பிரியாணி' படத்தின் FIRST LOOK டீஸர் வெளியாகும் எனத் தெரிகிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி நடித்து வரும் படம் 'பிரியாணி'. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். யுவன் இசையில் வெளிவரும் 100வது படம் இது.

சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. போட்டொஷூட் புகைப்படங்கள் மட்டுமே இதுவரை வெளியாகி இருக்கிறது. ஒரிஜினல் படங்கள், கார்த்தியின் லுக் என எதுவுமே வெளியிடாமல் இருக்கிறது படக்குழு.

கார்த்தி பிறந்தநாளான வரும் 25ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் என அனைத்தையுமே வெளியிடத் தீர்மானித்து இருக்கிறார்கள்.

அதுமட்டுமன்றி யுவன் இசையமைக்கும் 100வது படம் என்பதால், படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக வெளியிடத் தீர்மானித்து இருக்கிறார்களாம். 'பிரியாணி' இசையை ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து வெளியிடத் தீர்மானித்து இருப்பது கூடுதல் தகவல்.

ரஹ்மான் இசை வெளியீட்டு விழாவுக்கு வருவாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close