தயாநிதி Vs அருள்நிதி

'வம்சம்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானாலும், 'மெளன குரு' என்ற படத்தின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்றவர் அருள்நிதி.

'மெளன குரு' படத்திற்கு பிறகு வாய்ப்புகள் குவியும் என்று நினைத்தது போலவே நடந்தது. ஆனால் அவரோ இப்போதைக்கு 'தகராறு' படத்தில் நடித்து வருவதால் அப்படம் முடிந்தவுடன் நடிக்கிறேன் என்று கூறிவந்தார்.

'தகராறு' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் பாக்கி இருக்கிறதாம். அதுமட்டுமன்றி இப்படத்தினால் தயாநிதி, அருள்நிதி இருவருக்கும் இடையே மிகப்பெரிய போர் நடந்து வருகிறதாம்.

'தகராறு' படத்திற்கு பிறகு ஆரம்பித்த 'உதயம் NH4' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, அப்படத்தினை உதயநிதி வெளியீட்டு லாபமும் அடைந்துவிட்டார்கள். ஆனால் தயாநிதி, 'தகராறு' படத்தில் எதுவும் ஆர்வம் காட்டுவதில்லையாம்.

இவரோ 'தகராறு' படத்தினை முடித்துவிட்டு, அடுத்த படத்திற்கு செல்லலாம் என்று இருக்கிறார். இதனால் இருவருக்கும் தகராறு வராத குறையாகத்தான் இருக்கிறதாம்.

படத்தலைப்பு இருவருக்கும் இடையே வெடிக்காமல் இருந்தால் சரிதான் என்கிறான் கொசுறு கபாலி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!