அச்சத்தில் ஆர்யா!

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஒருவரைக் கூட விடாமல் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்துவதால் ஆர்யா பயத்தில் இருக்கிறார்.

ஆர்யாவுக்கும், கிரிக்கெட் சூதாட்டத்துக்கும் என்ன தொடர்பு?

'ராஜஸ்தான் ராயல்ஸ்' அணியின் உரிமையாளரும், நடிகையுமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விசாரணை முடியும் வரை அவரை இந்திய கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்த ராஜ்குந்த்ராவும், ஆர்யாவும் நெருங்கிய நண்பர்களாம். இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொள்வதோடு, ஒன்றாக ஊர் சுற்றுவார்களாம். ராஜ்குந்த்ரா யார் யாரிடம் போனில் பேசினார், அவர்களுக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கிறதா என்றெல்லாம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதனால் எங்கே தன்னுடைய போன் நம்பரும் போலீஸில் மாட்டினால் விசாரணைக்கு அழைப்பார்களோ என்ற பயத்தில் நொந்து நூடுல்ஸாகிக் கிடக்கிறாராம் ஆர்யா.

ஏற்கெனவே அஞ்சலி விவகாரத்தின்போது சென்னை கமிஷனர் அலுவகத்துக்கு வந்து விளக்கம் அளித்தவர், இந்தமுறை டெல்லி போலீஸ் வரை செல்ல வேண்டியது வருமோ என புலம்பித் தவிக்கிறாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!