ஜோடி வேணும் - அடம்பிடிக்கும் சந்தானம்!

'இவர் இல்லனா படமே இல்ல' என்று சொல்லும் அளவுக்கு தற்போது வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் சந்தானம் நடித்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் இவரை வைத்துதான் சில படங்கள் ஒரு வாரத்துக்காவது தியேட்டரில் ஓடுகின்றன.

'சந்தானம்தான் இந்த படத்தோட ஹீரோ. அந்தளவுக்கு காமெடியில பின்னி எடுத்திருக்கிறார்' என்று அவர் காதுபடவே பலபேர் கமெண்ட் அடிக்கிறார்களாம். இதைக்கேட்டு குளிர்ந்துபோன சந்தானம், அந்த 'காமெடி' என்கிற வார்த்தையை மட்டும் மறந்துவிட்டாராம்.

அதனால் இனிமேல் தான் நடிக்கும் படங்களில், தனக்கு ஜோடியாக அழகான நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என்று கட்டளை போட்டுள்ளாராம். இதன் முதற்கட்டமாக 'யா யா' என்ற படத்தில் 'காதல்' படத்தில் நடித்து, இப்போது மார்க்கெட் இல்லாத சந்தியாவை தனது ஜோடியாக்கி உள்ளார்.

இருவரும் நாயகன் - நாயகி போன்றே காதல் செய்வதோடு, அவர்களுக்கென ரொமான்ஸ் பாடலும் படத்தில் உள்ளதாம். மேலும், ஹீரோக்கள் ரேஞ்சுக்கு சந்தியாவுக்கு முத்தம் கொடுப்பது, இடுப்பைக் கிள்ளுவது போன்ற சில்மிஷ விளையாட்டுகளையும் செய்துள்ளாராம் சந்தானம்.

இதே படத்தில் நடித்துள்ள சிவா, தன்ஷிகா போன்றே சந்தானம் - சந்தியாவின் காதல் லீலைகளும் கிளுகிளுப்பாக படமாக்கப்பட்டுள்ளதாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!