ரெய்டுக்கு காரணமான 'தில்லுமுல்லு?'

'மிர்ச்சி' சிவா நடிப்பில் சமீபத்தில் ரிலீஸாகி தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும்(?) படம் 'தில்லுமுல்லு.' 'வேந்தர் மூவிஸ்' மதன் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

சென்ற வாரம் 'வேந்தர் மூவிஸ்' அலுவலகம் உள்பட, அதற்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினர் திடீரென சோதனை நடத்தினார்கள்.

சோதனைக்கு காரணமாக கல்வி நிறுவனத்தின் அட்மிஷன் தான் என பலராலும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், உண்மையான காரணம் அதுவல்ல, 'தில்லுமுல்லு' படம்தான் ரெய்டுக்கு காரணம் என்று காதைக் கடிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

'தில்லுமுல்லு' படத்தின் தயாரிப்புச் செலவு 6 கோடி ரூபாய். ஆனால், படத்தின் விளம்பரத்துக்காக மட்டும் தனியாக 5 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாம். இதுதான் வருமானவரித் துறையினரின் கண்ணை உறுத்தியிருக்கிறது.

ரெய்டின்போது 'வேந்தர் மூவிஸ்' அலுவலகத்தில் இருந்து 6 கோடியே 30 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!