'பரோட்டா' சூரியின் அலப்பறை!

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் பரோட்டாவால் வாழ்வு பெற்றவர் காமெடி நடிகர் சூரி. தமிழ் சினிமாவில் இப்போது சந்தானத்தை அடுத்து இவர்தான் டாப் காமெடியன்.

பெரிய ரவுண்டு வருவார் என எல்லாரும் எதிர்பார்க்க, அவர் செய்யும் அலப்பறையே அவரை சீக்கிரம் வீட்டில் உட்காரவைத்துவிடுமோ என அஞ்சுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

உதயநிதி நடிக்கும் 'கதிர்வேலன் காதல்' படத்தில் முதல் பாதி முழுக்க சூரி வருவது போலவும், இரண்டாம் பாதி முழுக்க சந்தானம் வருவது போலவும் கதையாம்.

முதல் பாதியில் மதுரை காட்சிகள் எடுத்தபிறகு திடீரென இரண்டாம் பாதியிலும் நான் தான் இருப்பேன் என அடம் பிடித்துள்ளார் சூரி. சந்தானத்தின் உயிர்த் தோழனான உதயநிதிக்கு இதனால் சூரி மீது செம கடுப்பு. பிறகு சந்தானமே இறங்கி வந்து சமாதானப்படுத்தியிருக்கிறார்.

'தில்லுமுல்லு' படத்திலும் இப்படித்தான்... சந்தானம் சூரியைக் கிண்டல் செய்யும்படி வருகிற காட்சிக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தாராம் சூரி. பின்னர் எப்படியோ அரை மனதோடு ஒப்புக்கொண்டுள்ளார்.

இப்படி அலப்பறை கொடுத்தா ரொம்ப நாளைக்கு இண்டஸ்ட்ரியில இருக்க முடியாதுப்பா என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!