நஸ்ரியாவுக்கும், ஜெய்க்கும் பத்திக்கிச்சாம்!

நடிகர் ஜெய்க்கும், 'நேரம்' படத்தில் அறிமுகமான நஸ்ரியாவுக்கும் காதல் பத்திக்கிச்சு என்று கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்.

ஏற்கெனவே நடிகை அஞ்சலிக்கும், ஜெய்க்கும் காதல் என சொல்லப்பட்டது. இருவரும் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஒன்றாக நடித்தபோது காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அஞ்சலி அதை மறுத்ததோடு, இனிமேல் ஜெய்யுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என ஆவேசமாக பேட்டி அளித்தார்.

'திருமணம் எனும் நிக்கா' படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் நஸ்ரியா. படப்பிடிப்பின்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளதாகவும், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஊர் சுற்றுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'நையாண்டி' படத்தில் நடித்து வருகிறார் நஸ்ரியா. படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் அங்கு ஜெய் தவறாமல் ஆஜராகிவிடுகிறாராம். இருவரும் கேரவேனுக்குள் பல மணி நேரம் தனிமையில் காதல் வளர்க்கிறார்களாம்.

இதனால் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்படுவதாக எரிச்சல்படுகிறார்கள் நையாண்டி படக்குழுவினர். ஸ்பாட்டுக்கு ஜெய் வந்தாலே அன்றைக்கு ஷூட்டிங் கேன்சல் என்று சொல்லும் அளவுக்கு இருவரின் காதலும் வேகமாக வளர்கிறதாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!