மீண்டும் இணைகிறதா ஷங்கர் - விஜய் கூட்டணி? | விஜய், ஷங்கர், ஐ, தலைவா, ஏ.ஆர்.முருகதாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (09/07/2013)

கடைசி தொடர்பு:14:01 (09/07/2013)

மீண்டும் இணைகிறதா ஷங்கர் - விஜய் கூட்டணி?

'நண்பன்' தந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஷங்கரும், நடிகர் விஜய்யும் மறுபடி இணையப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.

விஜய் நடித்துள்ள 'தலைவா' விரைவில் ரிலீஸாக உள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது 'ஜில்லா' படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

'ஜில்லா'வுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் விஜய். 'துப்பாக்கி' போலவே அதிரடியான ஆக்ஷன் கதையைத்தான் இந்த முறையும் தேர்வு செய்திருக்கிறார்களாம்.

ஷங்கரும் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகும் 'ஐ' பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இன்னும் சில மாதங்களுக்கு படப்பிடிப்பு நீளும் எனத் தெரிகிறது.

இருவரும் தங்கள் கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு ஒன்றாக இணையப் போகிறார்கள் என்ற தகவல் கோடம்பாக்கத்தில் பரவியுள்ளது. இதற்காக ஏ.ஆர்.முருகதாஸ் தவிர, வேறு யாருக்கும் கால்ஷீட் ஒதுக்காமல் இருக்கிறார் விஜய்.

வழக்கம்போலவே இந்தப் படத்தையும் மெகா பட்ஜெட்டில்தான் எடுக்கப் போகிறார் ஷங்கர். அனேகமாக அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்கலாம் எனத் தெரிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close