இஸ்லாமியராக நடிக்கும் விஜய்? | விஜய், ஜில்லா, நேசன், மோகன்லால், துப்பாக்கி, ஏ.ஆர்.முருகதாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 16:27 (10/07/2013)

கடைசி தொடர்பு:16:27 (10/07/2013)

இஸ்லாமியராக நடிக்கும் விஜய்?

நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்து வரும் படம் 'ஜில்லா.'

இந்தப் படத்தில் குல்லா அணிந்து, தாடி வைத்து இஸ்லாமியர் வேடத்தில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

முழுப்படத்திலும் இஸ்லாமியர் வேடமல்ல, ஒரே ஒரு காட்சியில் மட்டும்தான் அவ்வாறு நடிக்கிறாராம்.

சில மாதங்களுக்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் 'துப்பாக்கி.'

இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருந்ததாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டின.

அத்துடன், படத்தை தடைசெய்யக்கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவிலும் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் இஸ்லாமிய அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, "எந்த ஒரு சூழலிலும் விஜய் இஸ்லாமியர்களை தவறாகச் சித்தரிக்க மாட்டார். எல்லோரிடமும் அன்பு செலுத்துபவர் அவர். அடுத்த படத்தில் நிச்சயம் இஸ்லாமியர்களின் நண்பனாக விஜய் நடிப்பார்" என வாக்கு கொடுத்தாராம் எஸ்.ஏ.சி.

அதை நிறைவேற்றும் பொருட்டுதான் 'ஜில்லா'வில் இப்படி ஒரு காட்சி வைக்கப்பட்டுள்ளதாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close