ரூ.5 கோடி கேட்கும் சந்தானம்!

இன்றைக்கு தமிழ் சினிமாவின் பாதி படங்கள் சந்தானத்தின் காமெடிக்காகத்தான் ஓடுகின்றன என்பது ஊரறிந்த விஷயம்.

இயக்குநரும், தயாரிப்பாளரும் யாரை நம்புகிறார்களோ... இல்லையோ... சந்தானத்தை நம்புகிறார்கள். படம் சூப்பர் ஹிட்டாகவில்லை என்றாலும், போட்ட முதலை எடுத்து விடலாம் என்பது அவர்களின் எண்ணம்.

இந்த வாய்ப்பை சந்தானமும் மிகச் சரியாகவே பயன்படுத்திக் கொள்கிறார். சந்தானத்துக்கு ஏற்ற போட்டி யாரும் இல்லாததால் அவருடைய காட்டில் அடைமழைதான்.

இதுவரை ஒரு நாளுக்கு 10 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார் சந்தானம். கடந்த சில மாதங்களாக வெளிவந்த படங்களில் பெரும்பாலானவை சந்தானத்தின் காமெடிக்காகவே ஓடியதால், சம்பளத்தை ஏற்றியிருக்கிறார் சந்தானம்.

அதேபோல ஒருசில சீன்களில் சந்தானம் வருவதைவிட, படம் முழுக்க வந்தால் வசூல் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார்களாம் தயாரிப்பாளரும், இயக்குநரும். அதுவும் சந்தானத்துக்கு வசதியாகப் போய்விட்டது.

தற்போது சந்தானத்தின் கால்ஷீட் கேட்டு வருபவர்களிடம், "25 நாட்கள் கால்ஷீட், படம் முழுக்க வரவேண்டும், ரூ.5 கோடி சம்பளம்" என்கிறார்களாம் சந்தானம் தரப்பினர். தயாரிப்பாளரும் வேறு வழியில்லாமல் சந்தானத்தையே புக் செய்கிறார்களாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!