அஜித் படத்துக்கு பெயர் வச்சாச்சா? | அஜித், ஆர்யா, விஷ்ணுவர்தன், டாப்ஸி, வலை, பறவை

வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (15/07/2013)

கடைசி தொடர்பு:11:57 (15/07/2013)

அஜித் படத்துக்கு பெயர் வச்சாச்சா?

படத்துக்கு பெயர் வைக்காமலேயே அஜித்தின் 53-வது பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

படத்தின் டீஸரை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டவர்கள், இன்னும் படத்தின் தலைப்பை உறுதி செய்யாமல் இருக்கிறார்கள்.

ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கி ஒரு வருடம் கழிந்தபிறகும் கூட இன்னும் பெயரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்துக்கு 'வலை' என்று பெயர் வைத்திருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், இயக்குநர் விஷ்ணுவர்தன் அதை மறுத்தார்.

இந்த நிலையில் தற்போது 'பறவை' என்று பெயர் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், படக்குழுவினர் இந்தத் தலைப்பை இன்னும் உறுதிசெய்யவில்லை.

இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தவிர, ஆர்யா - டாப்ஸி ஜோடியும் உள்ளது. யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தலைப்பு உறுதியாகாததால் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்காமல் இருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close