ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்!

'தகராறு' படத்தைத் தொடர்ந்து அருள்நிதி நடிக்கும் புதிய படத்தை சிம்புதேவன் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அருள்நிதி - பூர்ணா நடித்துள்ள படம் 'தகராறு.' கணேஷ் விநாயக் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். மதுரையை கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக உள்ள இந்தப் படத்தை, 'கிளவுட் நைன் மூவிஸ்' தயாநிதி அழகிரி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, 'இம்சை அரசன் 22-ம் புலிகேசி', 'அறை எண் 305-ல் கடவுள்' படங்களை இயக்கிய சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் அருள்நிதி.

வடிவேலு நடிப்பில் சூப்பர் ஹிட்டான 'இம்சை அரசன் 22-ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்திருந்தார் சிம்புதேவன். ஆனால், என்ன காரணத்தாலோ அந்த முயற்சி கைகூடவில்லை.

இந்தப் படத்துக்கு 'ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். இப்படத்தினை அருள்நிதியின் அப்பாவான மு.க.தமிழரசு தனது சினிமா தயாரிப்பு நிறுவனமான மேகனா மூவிஸ் மூலம் தயாரிக்க இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!