தனுஷுக்கு ஜோடியாக அமலா பால்? | தனுஷ், அமலாபால், வேங்கைசாமி

வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (15/07/2013)

கடைசி தொடர்பு:14:48 (15/07/2013)

தனுஷுக்கு ஜோடியாக அமலா பால்?

தனுஷின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கப் போகிறார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்.

தந்தி டி.வி.யில் புதிதாக ஒளிபரப்பாகும் ஷோ ஒன்றில் இருவரும் ஜோடியாகக் கலந்து கொண்டதை அதற்கு உதாரணமாகச் சொல்கிறார்கள்.

வெற்றிமாறன் இயக்கத்தில் 'வேங்கைசாமி', கே.வி.ஆனந்த் மற்றும் சுராஜ் இயக்கும் படங்கள் என அடுத்தடுத்து மூன்று புராஜக்ட்டுகள் தனுஷுக்கு உள்ளன.  

இந்த மூன்று படங்களிலுமே கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எனவே, இந்த மூன்று படங்களில் ஏதாவது ஒன்றில் அமலா பால் ஹீரோயினாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், "என்னுடைய குடும்பத்தில் நான் தான் கடைசி பையன். தம்பி இல்லாதது எனக்கு வருத்தமாக இருந்தது. சிவகார்த்திகேயன் என்னுடைய தம்பி போல நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

மேலும், "இந்திப் படம் என்பது சட்டை, பேண்ட் மாதிரி. அதை உடுத்திக்கொள்ள மட்டும்தான் முடியும். ஆனால், தமிழ்ப் படம் என்னுடைய உயிர்மூச்சு" என உணர்ச்சிவசப்பட்டார் தனுஷ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close