ஒரே பாடலுக்கு இசையமைக்கும் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்? | இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (16/07/2013)

கடைசி தொடர்பு:11:55 (16/07/2013)

ஒரே பாடலுக்கு இசையமைக்கும் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்?

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை, தென்னிந்திய சினிமா வர்த்தக சபை கொண்டாட இருக்கிறது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை சென்னையில் விழா நடைபெற உள்ளது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் இந்த விழாவில், முதல் நாள் தமிழ் மற்றும் மலையாளத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளில் தெலுங்கு மற்றும் கன்னடத்துறையைச் சேர்ந்தவர்கள் பங்குபெறுவர்.

இறுதி நாளில் ஒவ்வொரு மொழியிலும் பிரபலமானவர்களைக் கவுரவிக்கும் வகையில், அவர்களுடைய தபால் தலை வெளியிடப்படும்.

தென்னிந்தியத் திரையுலகமே மொத்தமாகக் கலந்துகொள்ளும் விழா என்பதால், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விழாவுக்காக இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து ஒரு பாடலுக்கு இசை அமைக்க கேட்டு இருக்கிறார்களாம். இதுபற்றி இருவரிடமும் பேசி இருக்கிறார்களாம். ஆனால், இருவரும் இன்னும் பதில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close