த்ரிஷா இனிமே அவ்ளோதானா? | த்ரிஷா, பூலோகம், என்றென்றும் புன்னகை

வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (18/07/2013)

கடைசி தொடர்பு:11:44 (18/07/2013)

த்ரிஷா இனிமே அவ்ளோதானா?

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவே நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை த்ரிஷா தான். மார்க்கெட்டில் நிலைத்திருக்க என்ன தேவையோ, அதைக் கச்சிதமாகப் புரிந்து கொண்டு செயல்பட்டவர்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் கோலோச்சிய நடிகை த்ரிஷா. இடையில் இந்திப் பக்கம் கூட போய் வந்தார். ஆனால், அவர் நடித்த 'கட்டா மிட்டா' ப்ளாப் ஆனதால், தமிழ் - தெலுங்கு இரண்டில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது தெலுங்கில் த்ரிஷாவுக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை. தமிழிலும், 'ஜெயம்' ரவியுடன் 'பூலோகம்', ஜீவாவுடன் 'என்றென்றும் புன்னகை' படங்கள் மட்டுமே கைவசம் இருக்கின்றன.

அதைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் சூர்யாவுக்கு த்ரிஷா தான் ஜோடி என்றார்கள். ஆனால், அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது.

ரசிகர்களுக்கும் த்ரிஷாவைப் பார்த்து போரடித்து விட்டதால், இயக்குநர்கள் யாரும் அவரைக் கண்டு கொள்வதில்லையாம். கையில் இருக்கும் இரண்டு படங்களும் முடிந்துவிட்டால் த்ரிஷாவுக்கு வேறு படமே இல்லை.

இதுவரை 'சிங்கிள் ஹீரோயின்' மட்டும்தான் என்று கண்டிஷன் போட்டவர், தற்போது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்டாக இருந்தாலும் ஓ.கே. என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.  

அப்படி இருந்தும் வாய்ப்புகள் எட்டிப் பார்க்கவே இல்லையாம். ஒருவழியாக 3 ஹீரோயின்களில் ஒருவராக த்ரிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

'ரம்' படத்தில் 3 கதாநாயகிகளில் த்ரிஷாவும் ஒருவர். அவருடன் ஓவியா, பூனம் பாஜ்வா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

அப்போ, த்ரிஷா இனிமே அவ்ளோதானா? என்கிறார்கள் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close