அரசியல் ஆசையில் கார்த்தி!

விஜய்யைத் தொடர்ந்து கார்த்திக்கிற்கும் அரசியல் ஆசை வந்துள்ளதாகக் கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்.

அரசியல் கதைகளாக தேடிப் பிடித்து அவர் நடித்து வருவதையும் இதற்கு காரணமாகச் சொல்கிறார்கள்.

கார்த்தி நடிப்பில் ஏற்கெனவே வெளிவந்த 'சகுனி' பக்கா அரசியல் படம். அதைத் தொடர்ந்து 'பிரியாணி' படத்திற்குப் பிறகு மற்றுமொரு அரசியல் கதையில் நடிக்கப் போகிறாராம் கார்த்தி.

இந்தப் படத்தை இயக்கப் போவது 'அட்டகத்தி' படத்தின் இயக்குநர் ரஞ்சித். ஆனால், ரஞ்சித் முதலில் சொன்னது அரசியல் கதையல்ல.

வடசென்னையில் வாழும் கபடி வீரன் ஒருவனின் கதையைத் தான் முதலில் சொல்லியிருக்கிறார் ரஞ்சித். கார்த்திக்கும் அதை ஓ.கே. செய்திருக்கிறார்.

திடீரென என்ன நினைத்தாரோ... தெரியவில்லை. ரஞ்சித்தை அழைத்த கார்த்தி, அரசியல் சம்பந்தமான கதையொன்றைத் தயார் செய்யும்படி சொன்னாராம்.

ரஞ்சித்தும் கார்த்தி எதிர்பார்த்த மாதிரியே அரசியல் கதையைச் சொல்லி, சம்மதம் வாங்கிவிட்டாராம்.

'ஏற்கெனவே, கோடம்பாக்கத்துல் இருந்து கோட்டைக்குப் போறேன்னு நிறைய பேரு சொல்லிக்கிட்டிருக்குறாங்க. அந்த லிஸ்ட்ல இவரும் சேர்ந்துட்டாரா... இனி அவ்வளவு தான்' என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!