சிம்புவுக்குப் போட்டியாக சிவகார்த்திகேயன்? | சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (21/07/2013)

கடைசி தொடர்பு:17:45 (21/07/2013)

சிம்புவுக்குப் போட்டியாக சிவகார்த்திகேயன்?

சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், சினிமாவுக்கு வருவோம் என நினைத்து கூடப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், தமிழ் சினிமாவின் இன்றைய மோஸ்ட் வான்டட் ஹீரோ அவர் தான்.

சின்னத்திரையில் பார்த்த சிவகார்த்திகேயனை நடிகராக ஏற்றுக்கொண்ட மக்கள், இப்போது பாடகராகவும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய பாடலை யு-டியூப்பில் வெளியிட, சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது.

இந்த ஹிட்டைப் பார்த்து சிவகார்த்திகேயனே ஆச்சர்யப்பட்டுப் போனாராம். கோடம்பாக்கம் முழுவதும் இப்போது இந்தப் பாட்டைப் பற்றித்தான் பேச்சாகக் கிடக்கிறது.

சூட்டோடு சூடாக சில விஷயங்களைச் செய்வதில் கோடம்பாக்கத்துக்காரர்கள் தான் கெட்டியாச்சே... வேறு சில நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கும் பாடச்சொல்லி சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுக்கிறார்களாம்.

ஆனால், இது சரிப்பட்டு வருமா என அவர் யோசிக்கிறாராம். 'முதல் பாட்டு பாடுறதுக்கு முன்னாடியும் இப்படித்தான் சொன்னீங்க. இப்போ பாட்டு பயங்கர ஹிட். துணிஞ்சி இறங்குங்க' என தைரியம் கொடுத்திருக்கிறார்களாம் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இப்போதுள்ள நடிகர்களில் சிம்பு தான் எல்லா ஹீரோக்களுக்கும் பாடுகிறார். விஜய், தனுஷ் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் மட்டுமே பாடுகிறார்கள்.

எனவே, சிம்புவுக்குப் போட்டியாக தானும் களத்தில் குதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்