'இன்னொரு லவ்வா..?' - அலறும் நயன்தாரா!

2003-ம் ஆண்டு மலையாளப் படத்தில் முதன்முதலாக அறிமுகமானார், நயன்தாரா. அறிமுகமாகி 10 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் நயன் தான் முன்னணியில் இருக்கிறார்.

மலையாளத்தில் அறிமுகமானாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கலக்கி வருகிறார். ஒரு படத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு அவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.

சினிமா வாழ்க்கையைப் போலவே அவருடைய சொந்த வாழ்க்கையும் பரபரப்பாகத்தான் இருக்கிறது. சிம்பு, பிரபுதேவா லிஸ்ட்டில் கடைசியாக ஆர்யா இணைந்திருந்தார்.

யார் கண்பட்டதோ தெரியவில்லை, சமீப காலமாக ஆர்யா - நயன் இருவருக்குள்ளும் மோதல் ஆரம்பித்திருக்கிறதாம். காரணம் ஆர்யா தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

'விளையாட்டுப் பிள்ளை'யான ஆர்யா, எல்லா நடிகைகளுடனும் சகஜமாக பழகக் கூடியவர். அப்படித்தான் 'சிங்கம்-2' சக்சஸ் பார்ட்டிக்கு அனுஷ்காவுடன் வந்தவர், பார்ட்டி முடியும்வரை அனுஷ்காவுடனே இருந்தார். இடையில் இருவரும் சேர்ந்து குத்தாட்டமும் போட்டனர்.

இதுதான் நயனுக்கும், ஆர்யாவுக்கும் இடையில் பிரச்னை உருவாகக் காரணம் என்கிறார்கள். இதனால் லவ் என்ற வார்த்தையைக் கேட்டாலே கடுப்பாகிவிடுகிறாராம் நயன்.

'இனிமேல் என் வாழ்க்கையில் காதல் என்பதே கிடையாது. அந்த வாழ்க்கை அலுப்பைத்தான் தருகிறது. இப்போதுதான் சந்தோஷமாக இருக்கிறேன்" என்று தெரிவித்து இருக்கிறார் நயன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!