சிக்கலில் 'தலைவா?' | விஜய், அமலா பால், வேந்தர் மூவிஸ், சென்சார், தலைவா

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (29/07/2013)

கடைசி தொடர்பு:12:10 (29/07/2013)

சிக்கலில் 'தலைவா?'

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'தலைவா' படத்திற்கு சிக்கல் ஏற்பட்டு இருப்பது தான் தற்போதைய ஹாட் டாக்.

'தலைவா' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் U/A சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள். ஆனால், படக்குழு இதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

'தலைவா' படத்தின் தயாரிப்பாளருக்கு அன்று முதல் வேந்தர் மூவிஸ் நிறுவனம் குடைச்சல் கொடுத்து வருகிறதாம். 'தலைவா' படத்தினை பெரும் விலைகொடுத்து வாங்கி, அதனை பல்வேறு ஏரியாக்களுக்கும் விற்றுவிட்டது வேந்தர் மூவிஸ்.

தற்போது U/A சான்றிதழ் என்றால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது. கிடைக்கும் வருமானத்தில் பெரும் தொகை வரிக்கே போய்விடும். அதுமட்டுமன்றி, வேந்தர் மூவிஸ் நிறுவனம் படத்தினைப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த வேண்டும் என வாங்கியது முதலே விளம்பரப்படுத்தும் பணியைத் தொடங்கிவிட்டது.

'தலைவா' படக்குழுவோ படத்தினை மீண்டும் சென்சாருக்கு அனுப்ப தீர்மானித்து இருக்கிறார்கள். அதிலும் U சான்றிதழ் கிடைக்கவில்லை என்றால், படத்தினை டெல்லியில் உள்ள சென்சார் குழுவிற்கு அனுப்ப இருக்கிறார்களாம்.

விளம்பரத்திற்கு என்று வேந்தர் மூவிஸ் நிறுவனமோ பல கோடிகளை வாரி இறைத்து விட்டது. ஆகையால், 'எங்களுக்கு 'U' சான்றிதழ் தான் வேண்டும்.. அதற்கு என்ன முடியுமோ பாருங்கள்' என்று தயாரிப்பாளருக்கு தெரிவித்து விட்டதாம் வேந்தர் மூவிஸ்.

இந்த பஞ்சாயத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியும். இந்தப் பிரச்னை நடைபெற்று வருவதால் தான் இன்னமும் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close