ஆர்யாவின் காதல் வலையில் அனுஷ்கா?

'இரண்டாம் உலகம்' படத்தில் இணைந்து நடித்துள்ள ஆர்யா, அனுஷ்கா இருவரும் காதலிக்கிறார்கள் என்பது தான் கோடம்பாக்கத்தின் தற்போதைய கிசுகிசு.

ஆர்யா, அனுஷ்கா இருவருமே இணைந்து நடித்துள்ள முதல் படம் 'இரண்டாம் உலகம்'. ஜார்ஜியா நாட்டில் சுமார் 45 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்றது. அதிலிருந்தே இருவரும் நெருக்கம் காட்டி வருகிறார்களாம்.

சமீபத்தில் நடைபெற்ற சூர்யாவின் 'சிங்கம்-2' சக்சஸ் பார்ட்டியில் கலந்து கொள்ள இருவருமே ஒன்றாக ஹைதராபாத்தில் இருந்து இணைந்தே வந்தார்களாம். அந்த பார்ட்டியில் அனைவருமே ஆச்சர்யப்படும் வகையில் இருவருமே மிகவும் நெருக்கம் காட்டினார்களாம்.

எனவே, விரைவில் இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

அதுமட்டுமன்றி, ஆர்யாவோ பூஜா, அமலா பால், பத்மப்ரியா, த்ரிஷா, எமி ஜாக்சன் மற்றும் தற்போது நயன்தாரா என அனைவரோடும் கிசுகிசுக்கப்பட்டவர். அந்த லிஸ்ட்டில் தற்போது அனுஷ்காவும் இணைந்து இருக்கிறாராம்.

ஹைதராபாத்தில் 'ராணி ருத்ரமாதேவி', 'பாஹுபாலி' ஆகிய படங்களுக்காக தீவிரமான வாள் சண்டை, குதிரை ஏற்றப் பயிற்சிகளில் இருக்கும் அனுஷ்காவோடு, தனக்கு படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் கலந்து கொண்டு லவ்வி வருகிறாராம் ஆர்யா.

பூஜா, அமலா பால், பத்மப்ரியா, த்ரிஷா, எமி ஜாக்சன், ஸ்ரேயா, நயன்தாராவைத் தொடர்ந்து கழற்றி விடப்பட்டவர்கள் பட்டியலில் அனுஷ்காவின் பெயரும் இடம்பெறாமல் இருந்தால் சரிதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!