நடிகையை மணக்கும் பரத்? | பரத், ஷம்மு, 555

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (31/07/2013)

கடைசி தொடர்பு:12:45 (31/07/2013)

நடிகையை மணக்கும் பரத்?

ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், நடிகர் பரத். 'செல்லமே' படத்தில் வில்லன்முகம் காட்டியவரை 'காதல்' படத்தில் பைத்தியமாக்கித் திரியவைத்தார் இயக்குநர் பாலஜி சக்திவேல். அந்தப் படம் நன்றாக ஓட, நிறைய படங்களில் கமிட் ஆனார்.

ஆனால், அதன்பிறகு அவர் நடித்த படங்கள் எதுவுமே பெரிய அளவில் ஓடவில்லை. சமீபத்தில் '555' படத்துக்காக ஜிம்மிற்குச் சென்று உடலை முறுக்கேற்றி வைத்திருந்தார். அவரின் உடற்கட்டைப் பார்த்து இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்தநிலையில், நடிகை ஷம்முவை பரத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரின் பெற்றோர்களும் கூட இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்களாம்.

'காஞ்சிவரம்' படத்தில் பிரகாஷ்ராஜ் - பிரியதர்ஷனால் அறிமுகம் செய்யப்பட்டவர் ஷம்மு. அதைத் தொடர்ந்து 'மலையன்', 'பாலை' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

பரத்துடன் 'கண்டேன் காதலை' படத்தில் இரண்டு காட்சிகளில் மட்டும் நடித்துள்ளார் ஷம்மு. காட்சிகள் இரண்டு தான் என்றாலும், இருவருக்குள்ளும் காதல் தீ காட்டுத்தீயாக பற்றிக் கொண்டதாம்.

அதன்பின் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால், பெற்றோருடன் அமெரிக்காவில் செட்டிலானார். இருந்தாலும் காதலை இருவரும் விடாமல் வளர்த்து வந்தனர்.

தற்போது இருவீட்டாரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டார்களாம். விரைவில் திருமணம் நடக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்