ஆந்திராவில் அறிமுகமாகும் அக்ஷரா? | கமல், அக்ஷரா, ஸ்ருதி, தமன்னா, ரமணா, சரிகா, மும்பை

வெளியிடப்பட்ட நேரம்: 10:14 (03/08/2013)

கடைசி தொடர்பு:10:14 (03/08/2013)

ஆந்திராவில் அறிமுகமாகும் அக்ஷரா?

மூத்த மகள் ஸ்ருதி பிஸியாகி வரும் இந்த நேரத்தில், தனது இளைய மகள் அக்ஷராவையும் ஹீரோயினாகக் களமிறக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் உலக நாயகன்.

தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் ஸ்ருதி பிஸியாகி விட்டார். லேட்டஸ்ட்டாக தமிழ் 'ரமணா'வின் ஹிந்தி ரீமேக்கிலும் கூட தமன்னாவை ஓரங்கட்டி விட்டு கமிட்டாகி விட்டார்.

இப்படி ஸ்ருதியின் சினிமா கேரியர் ஹெல்த்தியாக போய்க்கொண்டிருப்பதால், அடுத்து தனது இளைய மகள் அக்ஷராவையும் ஹீரோயினாகக் களமிறக்க ரெடியாகி வருகிறார் கமல். அனேகமாக தெலுங்கில் தான் அவரது அறிமுகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மும்பையில் அம்மா சரிகாவுடன் தங்கியிருக்கும் அக்ஷராவுக்கு சினிமாவில் நடிப்பதை விட அதற்குப் பின்னால் டைரக்ஷன் உள்ளிட்ட வேலைகளைச் செய்வதில் தான் அதிக ஆர்வம். அதற்காக பிரபல பாலிவுட் டைரக்டர் ஒருவரிடம் கூட அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்தார்.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு சி.சி.எல் கிரிக்கெட் போட்டிகளிலும், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஃபிலிம்பேர் அவார்டு நிகழ்ச்சியிலும் அக்ஷராவைப் பார்த்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் அவரை நடிக்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

குறிப்பாக, ஃபிலிம்பேர் விழாவுக்கு அக்கா ஸ்ருதியுடன் சென்ற அக்ஷராவை நாகசைதன்யா பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார். அப்புறம் என்ன..? நாக சைதன்யாவின் படத்தில் தான் அக்ஷராவின் அறிமுகம் இருக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள் ஆந்திரவாலாக்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close