ஹீரோ அவதாரத்தில் கவுண்டமணி?

தமிழ் சினிமாவின் சிரிப்பு சரித்திரத்தை கவுண்டமணியின் பெயர் இல்லாமல் எழுத முடியாது. இப்போதும் அவரின் காமெடிக் காட்சிகளை ஒளிபரப்பாமல் எந்த ஒரு டி.வி. சேனலும் இல்லை.

கவுண்டமணி நாயகனாக நடிக்க இருக்கிறார் என்பது தான் கோடம்பாக்கத்தின் இன்றைய டாக்காக இருக்கிறது. இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி. நாயகனாகவும் சில படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் மீண்டும் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம் கவுண்டமணி. தற்போது சாந்தனு உடன் 'வாய்மை' என்ற படத்தில் நடித்து வருகிறார் கவுண்டமணி.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறாராம். வெற்றிமாறனின் உதவியாளர் இப்படத்தினை இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் முழுக்கதையையும் கேட்டு சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!