குத்துப்பாட்டு மூலம் ரீ-எண்ட்ரியாகும் ஐஸ்வர்யா ராய்?

'உலக அழகி' ஐஸ்வர்யா ராய் குத்துப்பாட்டுக்கு ஆடப் போகிறார் என்பது பாலிவுட்டின் இப்போதைய பரபரப்புச் செய்தி.

அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் ஐஸ்வர்யா. ஆனால், கர்ப்பமானதும் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

தற்போது ஐஸ்வர்யாவின் மகள் ஆரத்யாவுக்கு ஒன்றரை வயதுக்கு மேல் ஆகிவிட்டதால், மறுபடியும் நடிப்பதற்கு ஏகப்பட்ட அழைப்புகள் வருகிறதாம்.

பாலிவுட் இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி, 'ராம்லீலா' என்ற படத்தை இயக்கி வருகிறார். ரன்வீர் சிங் ஹீரோவாகவும், தீபிகா படுகோன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் ஐஸ்வர்யாவும் இடம்பெற வேண்டுமென விரும்புகிறாராம் பன்சாலி.

எனவே, குத்துப்பாடல் ஒன்றுக்கு நடனமாடும்படி ஐஸ்வர்யாவிடம் கேட்டுள்ளாராம். ஆனால், ஐஸ்வர்யா இன்னும் பதில் சொல்லவில்லையாம்.

ஏற்கெனவே, பன்சாலியும், ஐஸ்வர்யாவும் 'ஹம் தில் தே சுகே சனம்', 'தேவதாஸ்', 'குஸாரிஸ்' ஆகிய 3 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

ஐஸ்வர்யா ஓ.கே. சொன்னால் தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க நிறைய தயாரிப்பாளர்கள் காத்துக் கிடக்கிறார்களாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!