கைவிரித்த சூர்யா; காப்பாற்றிய விஜய்?

சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிப்பில், ஹரி இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'சிங்கம்-2.'

இந்தப் படத்தில், கப்பலில் இருந்து வில்லனைத் தூக்கி கடலில் வீசும் ஒரு காட்சி இருக்கிறது. இந்தக் காட்சியில் ரஞ்சன் என்ற சண்டைக் கலைஞர் நடித்திருக்கிறார். ஹரியின் 12 படங்களிலும் இவர் அடியாளாக நடித்துள்ளார்.

இந்தக் காட்சியைப் படமாக்கும்போது, சூர்யா ஆக்ரோஷத்துடன் தாக்க, எகிறிக் குதித்து கடலுக்குள் விழுகிறார் ரஞ்சன். ஆனால், கொஞ்சம் தடுமாறி கடலுக்குள் இருந்த பாறைமீது விழுந்துவிட்டார்.

இதில் ரஞ்சனுக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட, அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், 'இனி ரஞ்சனால் நடக்க முடியாது' என்று சொல்ல, சோகத்தில் தவிக்கிறது ரஞ்சனின் குடும்பம்.

ஒருமுறை மட்டுமே மருத்துவமனை பக்கம் எட்டிப் பார்த்த சூர்யா, அதன்பிறகு அந்தப் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லையாம். படக்குழுவினர் கூட யாரும் மருத்துவமனைக்குச் செல்லவில்லையாம்.

இந்த சம்பவம் நடந்தபோது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், தன்னுடைய சொந்த செலவில் ரஞ்சனுக்கு மருத்துவ உதவி அளித்திருக்கிறார்.

மேலும், சூர்யா, ஹரி இருவரையும் சந்தித்து ரஞ்சனின் நிலையை எடுத்துச்சொல்ல, 'நான் எதுவும் பண்ண முடியாது' என்றிருக்கிறார் சூர்யா. ஹரியோ, 'கவனமா சண்டை போடலைன்னா இப்படித்தான்' என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டாராம்.

செய்வதறியாது தவித்த அந்தக் காவல்துறை அதிகாரி, 'ஜில்லா' படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று விஜய்யிடம் இதைப் பற்றிக் கூறியுள்ளார். உடனே, 40 ஆயிரம் ரூபாய் பணமும், இரண்டு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்களையும் தன்னுடைய உதவியாளர் மூலம் ரஞ்சனின் வீட்டுக்கு கொடுத்து அனுப்பி இருக்கிறார் விஜய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!