'துருவ நட்சத்திரம்' கதையில் விக்ரம்? | விக்ரம், கெளதம் மேனன், த்ரிஷா, துருவ நட்சத்திரம்

வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (19/08/2013)

கடைசி தொடர்பு:14:03 (19/08/2013)

'துருவ நட்சத்திரம்' கதையில் விக்ரம்?

விக்ரம் நடிப்பில், கண்ணன் இயக்கத்தில் பூஜை போடப்பட்ட படம் 'கரிகாலன்.' சரீன் கான், அஞ்சலி, பசுபதி, ராதிகா ஆப்தே, மித்ரா குரியன் ஆகியோரும் அந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தது.

சில நாட்கள் ஷூட்டிங் போனபிறகு திடீரென அந்தப் படத்தை நிறுத்திவிட்டார்கள். தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'ஐ' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

'கரிகாலன்' படத்தில் நடிப்பதற்காக விக்ரமுக்கு கொடுத்த சம்பளத்தை திருப்பி வாங்காமல், அடுத்த படத்திற்கு புக் செய்துவிட்டது சில்வர் லைன் ஃபிலிம் ஃபேக்டரி.

இந்தப் படத்தை கெளதம் மேனன் இயக்கப் போகிறார். கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சரத்குமார் நடிக்கும் படத்தை இயக்கிய பிறகு, இந்தப் படத்தை கெளதம் மேனன் இயக்குவார் என்று கூறப்படுகிறது. அநேகமாக சூர்யாவுக்காகத் தயார் செய்த 'துருவ நட்சத்திரம்' கதையைத்தான் எடுக்கப் போகிறார் என்கிறார்கள்.

இந்தப் படத்திலும், தரணி இயக்கும் 'ராஸ்கல்' படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்கப் போகிறாராம் விக்ரம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close