சமுத்திரக்கனிக்கு ஜோடியாக சரண்யா பொன்வண்ணன்? | தனுஷ், அமலா பால், நய்யாண்டி, நஸ்ரியா, வேல்ராஜ். கே.வி.ஆனந்த், அனிருத், வேலையில்லா பட்டதாரி, சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன்

வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (21/08/2013)

கடைசி தொடர்பு:11:26 (21/08/2013)

சமுத்திரக்கனிக்கு ஜோடியாக சரண்யா பொன்வண்ணன்?

சற்குணம் இயக்கத்தில் 'நய்யாண்டி' படத்தில் நடித்து முடித்துவிட்டார் தனுஷ். அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார்.

அதனையடுத்து, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் 'வேலையில்லா பட்டதாரி', கே.வி.ஆனந்த் இயக்கும் பெயரிடப்படாத படம் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கப் போகிறார் தனுஷ்.

இதில், 'வேலையில்லா பட்டதாரி' ஷூட்டிங் முதலில் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். இது தனுஷுக்கு 25-வது படம் என்பதால் ஸ்பெஷலாக இருக்கும் என்கிறார்கள்.

இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். 'எதிர்நீச்சல்' படத்தின் வெற்றிக்குப் பிறகு தன்னுடைய 'வுண்டர்பார்' நிறுவனம் மூலம் தனுஷே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன் தனுஷுக்கு அம்மாவாக நடிக்கிறார். இயக்குநர் சமுத்திரக்கனியும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அனேகமாக, தனுஷுக்கு அப்பா கேரக்டரில் நடிக்கலாம் என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close