விஜய்க்கு ஜோடியாகிறாரா நஸ்ரியா? | நஸ்ரியா,ஜீவா, கார்த்தி, விஜய்,நய்யாண்டி, ராஜாராணி

வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (03/09/2013)

கடைசி தொடர்பு:11:46 (03/09/2013)

விஜய்க்கு ஜோடியாகிறாரா நஸ்ரியா?

அறிமுகமான முதல் படத்திலேயே பாராட்டுகளை அள்ளிக் கொண்டார் நஸ்ரியா.  'நேரம்' படம் சரியான நேரத்தில் ரிலீஸ் ஆனதால் தமிழ் சினிமா ஹீரோக்கள், இயக்குநர்களின் குட் புக்கில் இருக்கிறார் நஸ்ரியா.
 
இப்போது  ஜெய்யுடன் 'திருமணம் என்னும் நிக்கா ', ஆர்யாவுடன் 'ராஜாராணி', தனுஷுடன் 'நய்யாண்டி' என அடுத்தடுத்து பிஸியாக இருக்கிறார்.

கார்த்தியுடன் ஒரு படம், ஜீவாவுடன் ஒரு படம் என புதிதாக இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் படத்தில் நஸ்ரியாவை நடிக்க வைக்கப் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.உதயநிதி நடிக்கும் அடுத்த படத்திலும் நஸ்ரியாதான் நாயகியாம்.

விஜய்க்கு ஜோடியானால்  சீக்கிரமே தமிழ்சினிமாவின் நம்பர் ஒன் நடிகை ஆகிவிடலாம் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார் நஸ்ரியா.

தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிவதால் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார் நஸ்ரியா.கோலிவுட்டே கொண்டாடும் அளவுக்கு நஸ்ரியாவின் வளர்ச்சி படுவேகமாக இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close