சங்கீதா வீட்டில் சண்டையா?

பாண்டியராஜனால் ரசிகா பெயரில் அறிமுகமான நடிகை பின்னாளில் சங்கீதா என்று பெயர் மாற்றிக் கொண்டார்.

‘பிதாமகன்', ‘தனம்', 'மன்மத அம்பு' படத்துக்கு பிறகு சில படங்களில் நடித்தார். அதன்பின் சினிமா சான்ஸ் நோ!

அப்போது சங்ககீதாமீது இவரைவிட வயசு குறைந்த பாடகர் க்ரிஷுக்குக் காதல் ஏற்பட்ட்டது.

பெற்றோரின் எதிர்ப்புகளைமீறி சங்கீதாவைக் கரம்பிடித்தார் க்ரிஷ். கல்யாணி ராகமாய் கலகலப்பாக சென்று கொண்டிருந்த சங்கீதாவின் கல்யாண வாழ்க்கையில் இப்போது முகாரிராகம். காரணம் கணவர் க்ரிஷ் தானாம்.

சமீபகாலமாக பாடகர் க்ரிஷ் வேறு சில பெண்களோடு அன்னியோன்யம் காட்டி வருகிறார். இதனால்
குடும்பத்தில் தற்போது குத்துச்சண்டை ரேஞ்சுக்கு சொத்துச்சண்டை சுனாமியாய் சுழன்று அடித்து வருகிறதாம்.

இதையெல்லாம் மறக்கவும், மறைக்கவும்,பொழுதுபோகவும் சங்கீதா  சின்னத்திரை நிகழ்ச்சியின் பாடல், நடனத்துக்கு நடுவராகப் பணியாற்றுகிறாராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!