கழற்றிவிடப்பட்ட சிவக்குமார் - கோபத்தில் சூர்யா, கார்த்தி

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வருகிற 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசய்யா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள்.

இதனை முன்னிட்டு 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தென்னிந்திய சினிமாவின் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா பிரச்னையால் ஆந்திர திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விழாவை ஏற்பாடு செய்வதற்கான முதல் கூட்டம், சென்னை - வடபழனியில் உள்ள க்ரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் நடிகர் சிவக்குமார் சேர்ந்து நடித்துள்ளார் என்பதால், அவரை வைத்து முதல்வரை விழாவுக்கு அழைத்துவந்துவிடலாம் என்று கருதி, விழாக்குழுவின் சேர்மனாக சிவக்குமாரை நியமித்தனர்.

இது ஒருபுறம் இருக்க, ஃபிலிம் சேம்பரின் தலைவரான கல்யாணம், கவர்னர் ரோசய்யா மூலம் ஜெயலலிதாவை அணுகி, விழாவில் கலந்து கொள்வதற்கான ஒப்புதலைப் பெற்றுவிட்டார். இவர் ஆந்திர தேசத்துக்காரர் என்பது கூடுதல் தகவல்.

இதனால் சிவக்குமாரை ஓரம்கட்டிவிட்டு கல்யாணமே விழாக்குழுவின் தலைவராக செயல்படுகிறார். எனவே, சூர்யாவும், கார்த்தியும் பயங்கர கோபத்தில் இருப்பதோடு, விழாவைப் புறக்கணிக்கும் முடிவில் இருக்கிறார்களாம்.

ஏற்கெனவே அக்கட தேசத்து சினிமாக்காரர்கள் வேறு வர மாட்டேன் என்று முரண்டு பிடிப்பதால், என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கின்றனர் விழாக்குழுவினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!