நீச்சல் உடையில் சமந்தா?

சமந்தா இப்போது ரொம்ப பிஸி.  தெலுங்கில் ஆறு படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும் சமந்தா சூர்யாவுக்கு ஜோடியாக லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க கமிட் ஆனார்.

இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். ஆரம்பத்தில் நஸ்ரியாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், சமந்தாவுக்குதான் அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தமிழிலும் ஒரு பிரதான இடத்தைப் பிடித்துவிடலாம் என்று நம்பியிருந்த சமந்தாவுக்கு, அப்போதுதான் டென்ஷனைக் கிளப்பும் அளவுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

ஒரு புதிய படத்தில் நீச்சல் உடை அணிந்து படு கவர்ச்சியாக சமந்தா நடிக்கிறார் என்பதுதான் அந்த டென்ஷன் விஷயம்.

இதற்ககாகக் கோபபட்ட சமந்தா,  'நான் நடித்த படங்களை நீங்கள் பார்த்திருந்தால் நீச்சல் உடையில் நடித்திருப்பதாக வந்த வதந்திக்குக் கூட நீங்கள் என்னிடம் விளக்கம் கேட்டிருக்க மாட்டீர்கள். நான் நீச்சல் ட்ரெஸ் போட்டு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

அப்படி வந்த செய்திகள் வெறும் வதந்தி தான்.' என்று கொந்தளித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!