தனுஷ் பிடியில் சிவகார்த்திகேயன்? | எதிர்நீச்சல், சம்பளம்

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (16/09/2013)

கடைசி தொடர்பு:12:33 (16/09/2013)

தனுஷ் பிடியில் சிவகார்த்திகேயன்?

பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' படத்தில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.

'மெரினா' படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து 'மனம் கொத்திப் பறவை', 'எதிர்நீச்சல்', 'கேடிபில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என வரிசையாக நடித்தார்.

'மெரினா'படம் நடிக்கும்போது சிவகார்த்திகேயனுக்கு எந்தப் பின்புலமும் இல்லை. '3' படத்தில் நடித்தபோது தனுஷும், சிவகார்த்திகேயனும் நண்பர்கள் ஆனார்கள். அந்த சமயத்தில் உருவான நட்பு இப்போதும் பெரிதாகப் பேசப்படுகிறது.

'என் தம்பி சிவகார்த்திகேயன்' என்று தனுஷ் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அதனாலேயே தன் தயாரிப்பில் உருவான 'எதிர்நீச்சல்' படத்துக்கு சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கினார் தனுஷ். அப்போது இருவரது நட்பும் இன்னும் ஆழமானது.

'என் வளர்ச்சிக்கு இவ்வளவு உறுதுணையாய் இருக்கிறாரே' என்று நெகிழ்ந்த சிவகார்த்திகேயன், தனுஷை தன் மானசீக குருவாகவே பார்க்கிறார்.

இப்போது படத்தின் கதை, சம்பளம் உட்பட சினிமா விஷயங்கள் குறித்து தனுஷிடம்தான் ஆலோசனையைக் கேட்கிறார். தனுஷ் சொல்லாமல் எந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் கமிட் ஆவதில்லையாம். தனுஷ் அறிவுரைப்படிதான் சம்பளம் கேட்கிறாராம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close