அடிக்கடி மாறும் நடிகையின் கணவர்கள்? | ஆகாஷ், விஜயகுமார், ராபர்ட், akash, vijayakumar, robert

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (19/09/2013)

கடைசி தொடர்பு:16:05 (19/09/2013)

அடிக்கடி மாறும் நடிகையின் கணவர்கள்?

நடிகை வனிதா விஜயகுமார் முதலில் நடிகர் ஆகாஷை மணந்தார். அவர்களுக்கு ஆண்குழந்தை உள்ளது.

இந்தநிலையில், ஆகாஷுக்கும், வனிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, இருவரும் பிரிந்தனர்.  அதன்பின் வேறு ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்தார் வனிதா.

முதல் கணவருக்குப் பிறந்த ஆண்குழந்தை விஜயகுமார் வீட்டில் இருக்க, அந்தக் குழந்தையைக் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ்.

ஆனால், குழந்தையைத் தரமுடியாது என இரண்டாவது கணவருடன் கோர்ட்டுக்குச் சென்று சண்டை போட்டார் வனிதா. இடையில் என்ன ஆனதோ... குழந்தைக்காக இரண்டாவது கணவரைப் பிரிந்து ஆகாஷுடன் சேர்ந்தார்.

இப்போது மறுபடியும் ஆகாஷ் கசந்துபோக, தற்போது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் சேர்ந்து வாழ்கிறார் வனிதா.

சினிமா நூற்றாண்டு விழாவில் நடக்கும் நடன நிகழ்ச்சிக்கு ராபர்ட்தான் டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார். அதனால் நடிகைகளுக்கு போன் போட்டு, 'நான் ராபர்ட் மிஸஸ் வனிதா பேசுகிறேன்...' என்று குஷியாகப் பேசுகிறாராம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close