ரஜினியின் பிறந்தநாளில் ரிலீஸாகிறது 'கோச்சடையான்' | செளந்தர்யா அஸ்வின், பாடல் வெளியீடு, தீபிகா படுகோன், soundarya ashwin, audio launch, deepika padukone

வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (27/09/2013)

கடைசி தொடர்பு:13:34 (27/09/2013)

ரஜினியின் பிறந்தநாளில் ரிலீஸாகிறது 'கோச்சடையான்'

இந்தியாவில் MOTION CAPTURE TECHNOLOGYல் உருவாகி வரும் திரைப்படம் 'கோச்சடையான்'. ரஜினி, தீபிகா படுகோன், ஆதி, ஷோபனா, சரத்குமார், நாசர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருக்கிறார்கள்.

செளந்தர்யா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். பாடல்களின் உரிமையை சோனி நிறுவனம் வாங்கியிருக்கிறது.

படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருக்க, 'இந்தா... அந்தா...' என்று ரிலீஸ் தேதி இழுத்துக்கொண்டே போகிறது. சில நாட்களுக்கு முன்புதான் படத்தின் டிரெய்லரையே வெளியிட்டார்கள்.

அடுத்ததாக பாடல்கள் எப்போது வெளியாகும் என அனைவரும் காத்திருக்கும் நிலையில், அக்டோபர் 7-ம் தேதி ஒரு பாடலை மட்டும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

'எங்கே போகுதோ வானம்...' என்று தொடங்கும் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். படத்தின் ஓப்பனிங்காக இருக்கும் இந்தப் பாடலை, எஸ்.பி.பி. பாடியுள்ளார்.

படத்தின் மொத்தப் பாடல்களையும் சில நாட்கள் கழித்து வெளியிட இருக்கிறார்கள். மேலும், ரஜினியின் பிறந்தநாளுக்கு படம் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close