சூர்யாவிடம் பணிந்த கெளதம் மேனன்? | அஜித், விஜய், துருவ நட்சத்திரம், துப்பறியும் ஆனந்த், யோஹன் அத்தியாயம் 1, ajith, vijay, thuruva natchathiram, thuppariyum anand, yohan aththiyayam 1

வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (30/09/2013)

கடைசி தொடர்பு:11:43 (30/09/2013)

சூர்யாவிடம் பணிந்த கெளதம் மேனன்?

சூர்யா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிக்க, கெளதம் மேனன் இயக்க இருந்த படம் தான் 'துருவ நட்சத்திரம்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தனது போட்டோன் கதாஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க முன்வந்தார் கெளதம் மேனன்.

ஆனால், படம் துவக்கம் முதலே ஏதோ ஒரு பிரச்னை இருந்து வந்தது. த்ரிஷா, அமலா பால், துளசி, சமந்தா என நாயகிகளாக பலரது பெயர்கள் அடிபட்டன. ஆனால், யாருமே நான் தான் 'துருவ நட்சத்திரம்' நாயகி என்று கூறவில்லை.

அதுமட்டுமன்றி, சூர்யாவோ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரிவிக்காமல், கதையில் இன்னும் நிறைய வேலைகள் இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார்.

இதனால், அந்தப் படம் டிராப்பாகி விட்டதாக பலரும் நினைத்தார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாக சூர்யாவும் லிங்குசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால், தற்போது சூர்யாவுக்காக இறங்கி வந்திருக்கிறார் கெளதம் மேனன். கதையில் சூர்யா சொன்ன திருத்தங்களை ஏற்று, அதன்படி கதையை மாற்றி அமைத்துள்ளாராம்.

அஜித்துக்காக கெளதம் சொன்ன 'துப்பறியும் ஆனந்த்' படமும், விஜய் நடிக்க இருந்த 'யோஹன் - அத்தியாயம் 1' படமும் கதை பிரச்னையால் டிராப்பானது. இதனால் அப்செட் ஆன கெளதம் மேனன், இந்தப் படமும் டிராப்பாகி விட்டால் இண்டஸ்ட்ரியில் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும் எனக் கருதி, தன்னுடைய பிடிவாதத்தை விட்டு இறங்கி வந்திருக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்துள்ள கெளதம் மேனன், கதாநாயகி யார் என்பதை மட்டும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close