ஓ.கே. ஆன ஹன்சிகா; கடுப்பில் த்ரிஷா!

ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்துக்குப் பிறகு தரணி இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்தப் படத்துக்கு ‘ராஸ்கல்’ எனப் பெயர் வைத்துள்ளனர்.

விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க, கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு கதாநாயகி செலக்ஷனை நடத்திப் பார்த்தார் தரணி. மும்பையில் ரூம் போட்டு கூட யோசித்துப் பார்த்தார். ஆனால், யாருமே செலக்ட் ஆகவில்லை.

ஒருவழியாக 'இந்தா... அந்தா'வென ஹன்சிகா மோத்வானியைத் தேர்ந்து எடுத்து இருக்கிறார், தரணி. இதனால் கடும் கொந்தளிப்பில் தகிக்கிறார், திரிஷா. தன்னைத்தான் அந்தப் படத்துக்கு ஹீரோயினாக்குவார் என த்ரிஷா கட்டிய மனக்கோட்டை இடிந்ததுதான் இதற்குக் காரணமாம்.

இத்தனைக்கும் விக்ரம், தரணி இருவரும் த்ரிஷா, அவரது அம்மா இருவருக்கும் குடும்ப நண்பர்கள். அப்படி இருந்தும் தன்னைக் கழற்றி விட்டார்களே என்கிற ஆத்திரத்தில் இருக்கிறாராம் திரிஷா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!