கெடுபிடி காட்டும் நஸ்ரியா? | நேரம், நய்யாண்டி, ராஜா ராணி, neram, naiyaandi, raja rani

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (03/10/2013)

கடைசி தொடர்பு:13:10 (03/10/2013)

கெடுபிடி காட்டும் நஸ்ரியா?

தமிழில் வெளிவந்த 'நேரம்' படத்தில் அறிமுகமானவர் நஸ்ரியா நஸீம். அவருக்கும் நேரம் நன்றாக அமையவே... தனுஷ், ஆர்யா, கார்த்தி என தமிழின் பெரும்பாலான இளம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.

இதனால் புதிதாகக் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம், ஹீரோ போலவே தனக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே ஓ.கே. சொல்கிறாராம்.

அத்துடன், 'ராஜா ராணி' படமும் ஹிட்டாகி இருப்பதால், தற்போது நடித்து வரும் படங்களிலும் தனக்கு கூடுதல் காட்சிகள் வைக்கும்படி இயக்குநரிடம் அன்பு வேண்டுகோள் வைக்கிறாராம்.

இந்த நிலையில், தான் அறிமுகமான 'நேரம்' படத்தில் நடித்த நிவினுடன் மலையாளப் படத்தில் ஜோடி சேரப் போகிறார். இந்தப் படத்தில் தன்னைச் சுற்றியே கதை நகர்வதால், உடனே ஓ.கே. சொல்லிவிட்டாராம் நஸ்ரியா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close