ஹன்சிகா சவுண்டு விடுவது ஏன்?

ஹன்சிகா தெலுங்கில் நடித்த 'Seeta Ramula Kalyanam Lankalo' படம், தமிழில் ‘ரவுடி கோட்டை’ என்கிற பெயரில் டப் ஆகிறது. ‘என் அனுமதி இல்லாமல் ‘ரவுடி கோட்டை’ படத்தைத் தமிழில் ரிலீஸ் செய்யக்கூடாது' என நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கிறார் ஹன்சிகா.

இதனால் அதிர்ந்து போன ‘ரவுடி கோட்டை’ தயாரிப்பாளர் சுந்தரலட்சுமி, ‘நாங்கள் தெலுங்கு தயாரிப்பாளரிடம் முறைப்படி அனுமதி பெற்று விட்டோம். எனவே, பட வெளியீட்டுக்கு ஹன்சிகா தடை விதித்தால் அவர்மீது வழக்கு போடுவேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து கோலிவுட்டில் விசாரித்தோம். ‘ஹைதராபாத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்லா விஜயபிரசாத் ஹன்சிகா நடித்த தெலுங்குப் படத்தை 2010-ல் தயாரித்தார். படத்தின் டிடிஎஸ் (Tax Detection Sourse) சர்டிபிகேட்டை தயாரிப்பாளரிடம் கேட்டராம் ஹன்சிகா. ஆனால், தயாரிப்பாளர் தரவில்லை.

பின்னர் அந்தப் படத்தில் பயன்படுத்திய காஸ்ட்யூம்களை தனது உதவியாளர் மூலம் மும்பைக்கு எடுத்துச் சென்று விட்டார் ஹன்சிகா. அதைத் திருப்பித் தரும்படி ஹன்சிகாவிடம் கேட்டார்கள். அவரும் கொடுத்துவிட்டு, டிடிஎஸ் சர்டிபிகேட்டை கேட்டார். ஆனால், இதுவரை தரவில்லை. அந்தக் கடுப்பில் தான் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்’ என்று விளக்கம் சொல்கிறர்கள்.

இதுதவிர இன்னொரு காரணமும் கிசுகிசுக்கப்படுகிறது. தெலுங்குப் படத்தில் அப்போது அதிக கவர்ச்சி காட்டி நடித்திருந்தாராம் ஹன்சிகா. தற்போது தமிழில் முன்னணி இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பெரிய நடிகையாகி விட்டதால், அந்த கவர்ச்சிப் படம் இங்கு ரிலீஸானால் தமிழிலும் தாராளம் காட்ட வேண்டியதிருக்கும் என நினைக்கிறாராம். அதனால் தான் வழக்கு தொடருவேன் என்ற சவுண்டு விட்டிருக்கிறார் ஹன்சிகா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!