புதுமாப்பிளைக்கு விருந்து வைத்த இயக்குநர்!

'16 வயதினிலே' தந்த இயக்குநர் அவர். 'இயக்குநர் இமயம்' என்பது அவரின் திறமைக்குக் கிடைத்த அடைமொழி.

சென்னை - நீலாங்கரையில் இருக்கிறது அவருடைய இல்லம். கடந்த 6-ம் தேதி 'முனியாண்டி விலாஸ்' ரேஞ்சுக்கு மணமணத்திருக்கிறது அந்த இல்லம்.

சினிமா மற்றும் அரசியலில் பிரபலமான ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது அல்லவா? அவருக்குத்தான் கல்யாண விருந்து கொடுத்தாராம் இயக்குநர்.

பறப்பன, நடப்பன, ஊர்வன, நீந்துவன... என்று அனைத்து ஜீவராசிகளையும் சமைத்துப் போட்டு அசத்தி விட்டாராம், கிராமத்து ராஜா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!