வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (12/11/2013)

கடைசி தொடர்பு:16:01 (12/11/2013)

ஆர்யாவுக்கு ஜோடியாகிறாரா தமன்னா?

'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'ஆல் இன் ஆல் அழகுராஜா ' படங்களை இயக்கியவர் எம். ராஜேஷ்.

இதில் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தைத் தவிர மற்ற மூன்று படங்களும், சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.

தீபாவளிக்கு ரிலீஸான படங்களில் 'ஆரம்பம்', 'பாண்டிய நாடு' ஆகிய இரு படங்கள் மட்டுமே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன.

'ஆல் இன் ஆல் அழகுராஜா' படம் அந்த அளவுக்கு ஹிட்டாகவில்லை. இந்நிலையில், ஆர்யாவும் ராஜேஷும் சந்தித்துப் பேசினார்களாம். 

அந்த சந்திப்பு நல்ல படியாகவே முடிந்திருக்கிறது. 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்துக்குப் பிறகு ஆர்யாவும் , ராஜேஷூம் மீண்டும் இணைகிறார்கள். சந்தானமும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு தமன்னாவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடக்கிறதாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்