மணிரத்னம் படத்தில் நடிக்கிறாரா பஹத் பாசில்? | மணிரத்னம் ,காற்று, ஃபஹத பாசில், manirathnam , kaatru, fahhad fazil

வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (15/11/2013)

கடைசி தொடர்பு:15:47 (15/11/2013)

மணிரத்னம் படத்தில் நடிக்கிறாரா பஹத் பாசில்?

'கடல்' படம் எதிர்பார்த்த அளவுக்கு ரீச் ஆகவில்லை .

ஆனால், இப்படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக்கும், துளசியும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மணிரத்னமும் அடுத்த படத்துக்கான வேலையை ஆரம்பித்து விட்டார்.

சூர்யா, கார்த்திக்கு மணிரத்னம் கதை சொன்னார் என்பதெல்லாம் உண்மையில்லையாம்.

இந்திப் படம் இயக்கலாம் என்றுதான் மணி  முதலில் நினைத்திருக்கிறார்.

இடையில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. தமிழிலேயே படம் இயக்கப் போகிறார்.

படத்துக்காக மூன்று டைட்டில்களை அவசர அவசரமாகப் பதிவு செய்திருக்கிறார் மணிரத்னம். அதில் 'காற்று' தான் படத்தின் டைட்டிலாம்.

மலையாளத்தின் மோஸ்ட் வான்டட் ஹீரோ பஹத் பாசிலை ஹீரோவாக நடிக்க வைக்கப் போகிறாராம்.

பஹத் பாசில் நடிக்கும் பட்சத்தில் படத்தை தமிழ், மலையாளம் எனும் இரு மொழிகளிலும் எடுக்கலாம் என்றிருக்கிறாம், மணி.

பஹத்துக்கு கதை சொல்லிவிட்டு, திரைக்கதையை முழுமையாக முடிக்க கொடைக்கானல் கிளம்பிவிட்டார் மணிரத்னம்.


நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close