2 கோடி சம்பளம் கேட்கிறாரா நயன்தாரா? | நயன்தாரா, nayanthara

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (20/11/2013)

கடைசி தொடர்பு:17:55 (20/11/2013)

2 கோடி சம்பளம் கேட்கிறாரா நயன்தாரா?

பிரபுதேவாவின் பிரிவுக்குப் பிறகு சினிமாவில் பிஸியான நடிகை ஆகிவிட்டார் நயன்தாரா.

'ராஜா ராணி', 'ஆரம்பம்' படங்கள் ஹிட்டானதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் நடிப்பதற்காக அதிக கவனம் செலுத்தி வருகிறார் நயன் தாரா.

தற்போது 'சுந்தர பாண்டியன்' பிரபாகரன் இயக்கும் 'இது கதிர்வேலன் காதல்' படத்தில் உதயநிதியுடன், நயன்தாரா நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஒரு கோடியே நாற்பது லட்சம் சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

'கஹானி' ரீமேக் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. 'அனாமிகா' என்று படத்துக்கு டைட்டில் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக இரண்டு கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

இப்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கேட்டு இருக்கிறாராம்.

'வல்லவன்' படத்துக்குப் பிறகு சிம்பு - நயன்தாரா சேர்ந்து நடிக்கும் படம் இது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close