தனுஜைக் காதலிக்கிறாரா அக்ஷரா?

கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன். தற்போது தன் தாய் சரிகாவுடன் மும்பையில் வசித்து வருகிறார்.

அக்ஷராவுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் பெருங்கனவு. அதனால் நடனம், உதவி இயக்குநர் என்று பல தளங்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறார்.

22 வயதில் அக்ஷரா தன் கனவை நனவாக்க கடும் உழைப்பைத் தருகிறார்.

தற்போது பால்கி இயக்கும் பாலிவுட் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் அமிதாப்பச்சனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதற்கிடையில், அக்ஷரா காதல் செய்திகளில் அடிக்கடி அடிபடுகிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவின் மகன் விவான்ஷாவைக் காதலிப்பதாக சொல்லப்பட்டது.

அக்ஷரா தற்போது தனுஜ் விர்வானியைக் காதலிப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் பாலிவுட் ஹீரோயின் ரதி அக்னிஹோத்ரியின் மகந்தான் தனுஜ் விர்வானி. இவர் 'லவ் யூ சோனியா' படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!