சிம்புவைப் பிரிகிறாரா ஹன்சிகா? | சிம்பு, ஹன்சிகா, நயன்தாரா, simbu, hansika, nayanthara

வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (21/11/2013)

கடைசி தொடர்பு:14:42 (21/11/2013)

சிம்புவைப் பிரிகிறாரா ஹன்சிகா?

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கின்றனர்.

இதற்கு ஹன்சிகா நேரடியாக எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை.

ஆனால், சிம்புவின் நடவடிக்கைகள் ஹன்சிகாவுக்கு பயங்கர டென்ஷனை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

சிம்பு தன் பழைய காதலியுடன் இணைந்து நடிக்கிறாரே? உங்கள் காதல் என்னாகும்? என்று ஹன்சிகாவிடம் நேரடியாகவே பலர் கேள்விகள் கேட்டு குடைகிறார்களாம்.

''கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் சிம்பு நயன்தாரா சேர்ந்து நடிக்கலாம். இதில் என்ன தவரு இருக்கிறது?'' என்று ஹன்சிகா பதில் அளித்தாலும், உள்ளுக்குள் ரொம்பவே வருத்தப்படுகிறாராம்.

உண்மையில் ஹன்சிகாவுக்கும் , சிம்புவுக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதாகவே சிலர் கூறுகிறார்கள்.

கடந்த வாரம் சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில்  விருது விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட சிம்புவும் ஹன்சிகாவும் அந்த விழா முடியும் வரை ஒருவரையொருவர் பார்த்துப் பேசிக்கொள்ளவில்லை.

சமீபமாக சிம்பு போன் செய்தால் ஹன்சிகா அழைப்பை ஏற்பதில்லையாம். தற்போது ஹன்சிகா- சிம்புவின் காதலில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.


நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close