பாலிவுட் செல்கிறாரா அஜித்? | அஜித், ஆரம்பம், ajith, aarrambam

வெளியிடப்பட்ட நேரம்: 15:48 (25/11/2013)

கடைசி தொடர்பு:15:48 (25/11/2013)

பாலிவுட் செல்கிறாரா அஜித்?

'பில்லா'வைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த 'ஆரம்பம்' சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தீபாவளிக்கு ரிலீஸான இப்படம் 100 கோடி வசூலை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

அஜித் நடிக்கும் 'வீரம்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இப்போதே படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'ஆரம்பம்' படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து நடிக்க பலர் ஆர்வமாக இருக்கின்றனர். 'துப்பாக்கி'. 'ரமணா' படங்களின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் அக்ஷய்குமாருக்கு 'ஆரம்பம்' ரீமேக்கில் நடிக்க ஆசையாம்.

இந்நிலையில், 'ஆரம்பம்' படம் பார்த்த ஷாருக்கான், இயக்குநர் விஷ்ணுவர்தனை மனம் திறந்து பாராட்டினாராம். ''படம் பிரமாதம். நீங்கள் விரும்பினால் இந்தியில் ரீமேக் செய்யுங்கள். நானே ஹீரோவாக நடிக்கிறேன்'' என்று ஷாரூக், விஷ்ணுவர்தனிடம் கூறி இருக்கிறார்.

அதோடு, தமிழில் அஜித் நடித்த வேடத்தில் ஷாருக்கானும், ராணா நடித்த வேடத்தில் அஜித்தும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, இந்தியில் ஷாரூக் நடித்த 'சாம்ராட் அசோகா' படத்தில் அஜித்தும் நடித்திருந்தார். இப்போது ஷாரூக்கும், அஜித்தும் இணைந்து நடித்தால் அதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close