அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய சூரி? | சூரி, soori

வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (04/12/2013)

கடைசி தொடர்பு:18:04 (04/12/2013)

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய சூரி?

சுசீந்திரன் இயக்கிய 'வெண்­ணிலா கப­டிக்­குழு' படத்தில் அறி­மு­க­மா­னவர் சூரி.

அந்தப் படத்தில் 50 பரோட்­டாக்­களை சளைக்­காமல் வெளுத்துக் கட்­டி­ அப்ளாஸ் வாங்கினார். அதனாலேயே அவரின் பெயர் பரோட்டா சூரி என்­றாகிவிட்­டது.

ஆனாலும், பரோட்டா சூரி என்று அழைப்பது சூரிக்கு சுத்தமாகப் பிடிக்காது. 'எனக்கு பரோட்டாவே பிடிக்காதுண்ணே' என வெள்ளந்தியாக சிரிப்பார்.

இப்போது சந்தானத்துக்கு அடுத்து காமெடி ரேஸில் சூரிக்கு அதிக வேல்யூ இருக்கிறது.

'வருத்­தப்­ப­டாத வாலிபர் சங்கம்' படத்தில் இவர் செய்த காமெடி ரசி­கர்­களின் ஆத­ரவைப் பெற்­றது.

குறைந்த சம்­பளம், பந்தா இல்­லாத நடிப்பு என்ற பிளஸ் பாயின்டால் சந்­தா­னத்தின் கால்ஷீட் கிடைக்­கா­த­வர்கள்  சூரியை மொய்க்கத் துவங்­கினர்.

அதனால்தான் சிம்பு, விஜய் படங்களில் சூரி பிஸியாக இருக்கிறார். தற்போது சூரியின் கால்ஷீட் டைரி நிரம்பி வழி­கி­றது. இதைப் பயன்­ப­டுத்தி, தன் சம்­ப­ளத்­தையும், அதி­ர­டி­யாக உயர்த்தி விட்­டாராம் சூரி.

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்­டி­ருந்த சூரி இப்போது மூன்று லட்சம் சம்பளம் கேட்கிறாராம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்