அஜித், விஜய்யுடன் மோதுகிறாரா வடிவேலு? | vadivelu, வடிவேலு

வெளியிடப்பட்ட நேரம்: 18:32 (05/12/2013)

கடைசி தொடர்பு:18:32 (05/12/2013)

அஜித், விஜய்யுடன் மோதுகிறாரா வடிவேலு?

'ஜில்லா', 'வீரம்', 'கோச்சடையான்' படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 'கோச்சடையான்' ரிலீஸ் தள்ளிப்போவது உறுதி செய்யப்பட்டதும், இரண்டு படங்கள் களத்தில் குதிக்கத் தயாராக இருக்கின்றன.

 இந்த சூழலில், வடிவேலுவின் 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படமும் அஜித், விஜய் படங்களோடு மோத இருக்கிறதாம்.

வடிவேலுவின் ரீஎன்ட்ரி பலமாக இருக்க வேண்டும் என்பதற்காக பொங்கலில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறார்களாம்.

'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' முழு நீளக் காமெடிப் படமாக உருவாகி உள்ளது.படத்தில் டபுள் ரோலில் நடித்திருக்கிறார் வடிவேலு. ஹீரோயினாக மீனாட்சி தீட்சித் நடித்துள்ளார். யுவராஜ் இயக்கியுள்ளார்.

விஜய், அஜித் படங்களுக்குத் தியேட்டர்கள் கைப்பற்றுவதைப் போல, வடிவேலு படத்துக்கும் தியேட்டர்களைக் கைப்பற்றும் முயற்சிகள் நடக்கின்றன.

அதிகமான தியேட்டர்கள் கிடைக்கும் பட்சத்தில் தெனாலிராமனை ரிலீஸ் செய்வார்களாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close