டாப்ஸிக்கு சிபாரிசு செய்கிறாரா ஆர்யா? | ஆர்யா, டாப்ஸி, arya, tapsee

வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (10/12/2013)

கடைசி தொடர்பு:16:46 (10/12/2013)

டாப்ஸிக்கு சிபாரிசு செய்கிறாரா ஆர்யா?

'ஆரம்பம்' படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த டாப்ஸிக்கு இப்போது சிபாரிசு செய்கிறாராம் ஆர்யா.

'தடையறத்தாக்க' மகிழ்திருமேனி இயக்கத்தில் தான் நடிக்கும் 'மீகாமன்' படத்திற்கு கதாநாயகியைத் தேடிக் கொண்டு இருக்கிறார்.

ஸ்ருதிஹாசன் நடிக்க நோ சொல்லிவிட்டார். இந்த நேரத்தில் டாப்ஸியின் அருமை பெருமைகளை இயகுனரிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறாராம் ஆர்யா.

சத்தமில்லாமல்  டாப்ஸியைக் கமிட் பண்ண சமயம் பார்த்து காய் நகர்த்துகிறாராம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர முடியாமலே தான் மார்க்கெட்டில் இருந்து காணாமல் போய் விடுவோமோ என்று நினைத்துக்கொண்டிருந்த டாப்ஸி, ஆர்யாவை சந்தித்து வாய்ப்பு கேட்டாராம்.

அதனால்தான், ஆர்யா சிபாரிசு செய்கிறாராம்.

 

 நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close